07.03.2021
ஆத்தும ஆதாயம்
ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியஞ்செய்வது – 5
“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19).
“உலகமெங்கும் போய் சகல ஜனங்களையும் எனக்கு சீஷராக்குங்கள்” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொல்லுகிறார். மேலும் இயேசு தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சபைக்கு பண்டமாற்று செய்கிறார். ஆகவே ஆத்தம ஆதாயத்தில் சபைக்கு முக்கியப் பங்கு உள்ளது. வானத்திலும், பூமியிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட சகல அதிகாரத்தையும் இயேசு சபைக்கு கொடுத்தார். தேவன் எல்லாவற்றையும் நமக்காகவே செய்திருக்கிறார். இயேசு சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்து பிசாசிடமிருந்த சகல அதிகாரங்களையும் பிடுங்கி நமக்குத் தந்தார். ஆகவே பிசாசைப் பற்றி பேசாமல், பிரச்சனைகளைப் பற்றி பேசாமல், ஆண்டவரைத் துதித்து மகிமைப்படுத்த வேண்டும். இரட்சிப்பு என்பது மிகவும் விலையேறப்பெற்றது. எந்தப் பொருளும் அதற்கு ஈடில்லை. ஆகவே இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இந்த இரட்சிப்பை நமக்கு இலவசமாக பெற்றுத் தந்திருக்கிறது. ஆகவே ஊழியம் செய்யும்போது நாம் ஏதோ வெட்கப்பட்டு, தலைகுனிந்து செய்யத் தேவையில்லை. வானத்திலும், பூமியிலும் அதிகாரமுள்ள இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாம் சொல்லுகிறோம். தலைநிமிர்ந்து சுவிசேஷத்தை சொல்ல வேண்டும்.
“பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்” (மாற்கு 10:17).
நித்தியஜீவன் என்றால் இந்த வாழ்க்கைக்குப் பிறகு வருகிற தொடர்ச்சியான ஜீவியம், முடிவில்லாத ஜீவியம். நம்முடைய உலகப்பிரகாரமான சரீரம் அழிந்து, நாம் மரித்த பிறகும் இரட்சிக்கப்பட்டவர்களுக்கு நித்திய வாழ்வு காத்திருக்கிறது. ஆகவேதான் பவுல், “சாவு எனக்கு ஆதாயம்” என்று சொல்லுகிறார். மனிதன் நித்தியஜீவனுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறான். முதலில் அதை இழந்துபோனான். மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அது திருப்பிக் கொடுக்கப்பட்டது. ஆகவேதான் இயேசு இவ்வாறு சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்”. இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து அவரைப் பற்றிக் கொண்டவர்கள் நித்தியஜீவனை அடைவார்கள். எனவேதான் இயேசுவைப் பற்றி மனிதனுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவருடைய கடமையாய் இருக்கிறது. இயேசு ஒரு வீட்டிற்கு வந்துவிட்டால் அங்கே பல ஆசீர்வாதங்கள் சங்கிலித்தொடர் போல வந்துகொண்டே இருக்கும்.
“அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்” (மாற்கு 10:22).
இங்கே அவன் இயேசுவின் மீது தன்னுடைய விசுவாசத்தை வைக்காமல் பணத்தின் மீது வைக்கிறான். ஆகவே அவன் நித்தியஜீவனை பெற்றுக்கொள்ளாமல் போய்விட்டான். “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து அநேக வேதனைகளினாலே தங்களை உருவக் குத்திக்கொள்கிறார்கள்” என்று வேதம் சொல்லுகிறது. பணம் வேறு, இயேசு வேறு. நம்முடைய தேவன் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். பணம் என்பது வெறும் காகிதம், அது நம்முடைய கடவுளாகாது. கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கும், நாம் செழிப்பாக வாழ்வதற்கும் பணம் தேவைப்படுகிறது. அதினால் நாம் பணத்தின் பின்னால் செல்லக்கூடாது. தேவனைத் தேடும்போது நமக்கு தேவைக்கும் அதிகமான பணம் நம்மை வந்து சேரும். வேதாகமத்தில் சாலொமோன் என்ற ஒரு வாலிபனைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் அவனிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டதற்கு அவன் ஞானத்தை தருமாறு கேட்கிறான். அதினாலே தேவன் மிகவும் சந்தோஷப்பட்டு, அவன் கேளாத ஐசுவரியத்தையும் சேர்த்து தந்தார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத்தேயு 6:33) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையாகிய ஞானமுள்ள வசனத்தை நம்முடைய மனதிலும், நாவிலும், குடும்பத்திலும் என எல்லா இடங்களிலும் வைக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய எல்லா பிரச்சனைகளும் ஒன்றுமில்லாமல் போய்விடும். பிசாசு பிரச்சனைகளை நம்மிடம் பெரிதாக, சிக்கலாக எடுத்துக்காட்டுவான். ஆனால் இயேசுவிற்கு எல்லாமே எளிது என்று நாம் விசுவாசிக்கும்போது எல்லாமே எளிதாகிவிடும். பிரச்சனைகள் மறைந்து, ஆசீர்வாதங்கள் நம்முடைய வாழ்க்கையை நிரப்பும்.
“சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித%E